ஹோட்டல் இடிப்பு சோடா பாட்டில் வீச்சு!

 கோவையில் பிரபலமான அன்னபூர்ணா உணவகத்தை கே.ஜி மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் இடித்துத் தள்ளிய புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னபூர்ணா மற்றும் ஸ்ரீ கௌரிசங்கர் உணவகம் இயங்கி வருகிறது. கோவை நீதிமன்றம் அருகில் உள்ள கே.ஜி.மருத்துவமனையின் வளாகத்திலும் அன்னபூர்ணாவின் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 45 ஆண்டுகளாக வாடகை அடிப்படையில் இந்த உணவகம், செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன், அன்ன பூர்ணா உணவகத்தைக் காலி செய்யுமாறு கே.ஜி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளப்பு இலைமம், ஓட்டல் இடிப்பு இதை ஏற்க மறுத்த அன்னபூர்ணா குழுமம், கே.ஜி மருத்துவமனை நிர்வாகம் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இருதரப்பினர் மத்தியில் சமரசம் ஏற்படவே வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையில் கடந்த சில நாள்களாக இருதரப்பினர் இடை யேயும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளது. ,