வீடியோவில், ஒரு நபர் பகல் நேரத்தில் போலீஸ்காரர் மீது துப்பாக்கியால் சுடுகிறார்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு எதிராக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் திங்கள்கிழமை முதல் வன்முறை மோதல்கள் நடைபெற்று வருகின்றன. வன்முறையில் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். 48 போலீஸ்காரர்களும் சுமார் 90 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். ஆனால் இவை அனைத்திற்கும் இடையில், திங்களன்று வெளிவந்த ஒரு வீடியோ மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.








வீடியோவில், ஒரு நபர் பகல் நேரத்தில் போலீஸ்காரர் மீது துப்பாக்கியால் சுடுகிறார். இந்த இளைஞனின் பின்னால் கற்களை வீசும் ஒரு கூட்டம் இருக்கிறது. சிவப்பு சட்டை அணிந்த இந்த இளைஞன், போலீஸ்காரரை நோக்கி கைத்துப்பாக்கியைக் காட்டியவாறே முன்னேறிச் செல்கிறான். கூட்டமும் அந்த இளைஞனுடன் முன்னோக்கி நகர்கிறது, துப்பாக்கியால் சுடும் ஓசை ஒலிக்கிறது.