கான்பெரா: கொரோனாவுக்கான எதிரான போராட்டத்தில் ஜி 20 தலைவர்களை பிரதமர் மோடி ஒன்றிணைக்க முயற்சி செய்வது குறித்து ஆஸி பிரதமர் ஸ்காட் மோரிஸன் பாராட்டினார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இதுவரை 6,500 மக்கள் பலியாகி உள்ளனர். 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகானில் பரவத் தொடங்கிய கொரோனா 120 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது.