அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பது குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர்.இதையடுத்து, நிர்வாக குழுவில் உள்ள நீதிபதிகளுடன், தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார்; சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசித்தார். பின்னர், நேற்று மாலை, தலைமை நீதிபதி, மதுரை புறப்பட்டு சென்றார். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிபதிகள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்தார். அவசர வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது; 'நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டு விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து ஆராயப்பட்டது.
மேலும், இறுதி விசாரணைக்கு வரும் வழக்குகளை தள்ளி வைப்பது; நீதிமன்றம் வரும் வழக்கறிஞர்கள், வழக்காடிகளை பரிசோதிப்பது என, முக்கிய முடிவுகள் குறித்து, இன்று அறிவிப்பு வெளியாகும். இந்த மாதம் முழுவதும், இதே நடைமுறையை அமல்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது. அதன்பின், நிலைமையை கவனித்து, அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பது குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர்