ரோம்: இத்தாலியில் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள், தங்கள் வீட்டின் பால்கனியில் இருந்தவாறு தமிழ் பாடலான 'இஞ்சி இடுப்பழகி' பாடலை பாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இது உண்மையான வீடியோவா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
உயிர்கொல்லி தொற்றுநோய் 'கொரோனா வைரஸ்' பாதிப்பால் உலகளவில் சீனாவிற்கு அடுத்தபடியான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் இதுவரை 24,747 பேர் பாதிக்கப்பட்டு 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் நடவடிக்கையாக அந்நாட்டின் முக்கிய நகரங்களை மூட, பிரதமர் கியூசெப் கான்டே உத்தரவிட்டார். இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்
இத்தாலியில் ஒலித்த இளையராஜா பாடல்; வைரலான வீடியோ